/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
/
மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 25, 2025 07:04 AM

வானுார்: ஒழிந்தியாப்பட்டில் இருந்து ராயஒட்டை வழியாக ராயப்புதுப்பாக்கம் செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் அடுத்த ஒழிந்தியாப்பட்டில் இருந்து கீழ்புத்துப்பட்டு செல்லும் சாலையின் இடைப்பட்ட பகுதியில் ராயஒட்டை வழியாக ராயப்புதுப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக ராயப்புதுப்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள், திண்டிவனம், கிளியனுார் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், தினந்தோறும் அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
ராயஒட்டையில் இருந்து ராயப்புதுப்பாக்கம் வரை, 3 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.
தற்போது இந்த சாலை படுமோசமாக மாறி விட்டது. ஆங்காங்கே கருங்கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதோடு மெகா சைஸ் பள்ளங்கள் உருவெடுத்துள்ளன.
இதனால் வாகனங்கள், பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இந்த சாலையை போடுவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

