/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு விவசாயிகளின் மகத்தான சேவையில் முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை
/
கரும்பு விவசாயிகளின் மகத்தான சேவையில் முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை
கரும்பு விவசாயிகளின் மகத்தான சேவையில் முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை
கரும்பு விவசாயிகளின் மகத்தான சேவையில் முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை
ADDED : செப் 30, 2025 07:53 AM
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை கடந்த 24 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கரும்பு மகசூலையும் ,லாபத்தையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு சேவைகளை வழங்கி தனது 25ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
ராஜ் ஸ்ரீ சுகர்ஸ், கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து புதிய ரகங்களை பெற்று பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கரும்பு ரகங்களை அறிமுகம் செய்து வருகிறது
திசு வளர்ப்பு மூலம் வீரியமான விதை கரும்பு உருவாக்கி மகசூலை அதிகரிக்க கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்திலிருந்து விதை கரும்பை தெரிவித்து விவசாயிகளுக்கு வழங்குகிறது.
மண் வளத்தை அதிகரிக்க பிரஸ்மட் கம்போஸ்ட் நுண்ணுாட்ட கலவை பயோ பொட்டாஷ் , நுண்ணுயிர் உரங்களை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்குகிறது.
தண்ணீரை சேமித்து மகசூலை அதிகரிக்க அரசு மானியத்துடன் குறித்த நேரத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ஆலை நிர்வாகம் துணை நிற்கிறது.கரும்பில் தாக்கும் பூச்சி நோயை கட்டுப்படுத்த ட்ரைக்கோ, டெட்ரா போன்ற உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை செயல்படுத்தி தேவைப்படும் நோய் கட்டுப்பாட்டு மருந்துகளை உடனுக்குடன் வழங்குகிறது.
வளர்ந்த கரும்பில் குறித்த நேரத்தில் களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி மருந்துகள், இயந்திரங்கள் மூலம் களைகளை கட்டுப்படுத்த தேவையான மினி டிராக்டர், பவர் டில்லர் ஏற்பாடு செய்து தருகிறது.
கட்டைக் கரும்பில் அதிக மகசூல் பெற பராமரிப்பு பணிகள் இடைவெளி நிரப்புதல் போன்ற செயல்களை தொழில் முனைவோர் குழுக்கள் மூலம் செயல்படுத்துகிறது.குறித்த காலத்தில், குறைந்த செலவில் கரும்பு வெட்டுவதை உறுதிப்படுத்த உள்ளூர் வெளியூர் வெளி மாநில கரும்பு வெட்டும் குழுக்களோடு, கரும்பு அறுவடை இயந்திரங்களையும் விவசாயிகள் வாங்க உதவி செய்து இயந்திர அறுவடையை ஊக்குவித்து வருகிறது.
கரும்பு மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு தொழில் நுட்ப தகவல்களை கொண்டு சேர்த்து கரும்புத்துறை களப்பணியாளர்களும் அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதோடு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம், தொழில்நுட்ப காணொலி, வயல்வெளி பயிற்சிகள் போன்றவைகளை செயல்படுத்தி வருகிறது.
கரும்பு விவசாயிகள் கரும்பில் அதிக மகசூலையும் நிகர லாபத்தையும் பெற விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகளை ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை செயல்படுத்தி வருகிறது.