தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/புதிய பாரத எழுத்தறிவு திட்ட அடிப்படை தேர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட அடிப்படை தேர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட அடிப்படை தேர்வு


UPDATED : நவ 15, 2026 03:41 PM

ADDED : நவ 15, 2026 03:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 03:41 PM ADDED : நவ 15, 2026 03:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் பனப்பாக்கம்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திட்டத்அடிப்படை தேர்வு நடந்தது.

தமிழகம் முழுவதும் இத்தேர்வில் பங்கேற்க 4 லட்சத்து 44 ஆயிரத்தி 908 பேர் பங்கேற்க பதிவு செய்திருந்தனர் .

இதில்விழுப்புரம் மாவட்ட அளவில் 20 ஆயிரத்து83 பேர் 1144 மையங்களில் தேர்வு எழுதினர். உதவி திட்ட அலுவலர் நாகமணி அனைத்து தேர்வு மையங்களிலும் ஆய்வு செய்தார்.பனப்பாக்கம் பள்ளி வளாகத்தில் நடந்த புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுதப் படிக்க தெரியாத 30 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் அடிப்படை கல்வியான தமிழ் படித்தல் ,எழுதுதல் படங்களை பார்த்து பெயர்களை தெரிந்து கொள்ளுதல், தங்கள் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட அடிபடை கற்றல் குறித்து கற்றுத் தரப்படுகின்றன. அந்ததந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி கல்வி கற்றுத் தரப்படுகிறது.

நேற்று பனப்பாக்கம் பள்ளியில் நடந்த எழுத்துத் தேர்வில் 20 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் பேனா, பென்சில், ரப்பர், பிஸ்கட் வழங்கப்பட்டது.

தேர்வை பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி, மணற்கேணி கற்றல் செயலி மண்டல ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், தன்னார்வலர்கள் இளமதி, சுகந்தி ஆகியோர் நடத்தினர் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us