/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொய்யப்பாக்கத்தில் புதிய துணை மின்நிலையம்
/
பொய்யப்பாக்கத்தில் புதிய துணை மின்நிலையம்
ADDED : மார் 20, 2025 05:13 AM

லட்சுமணன் எம்.எல்.ஏ., கோரிக்கை
விழுப்புரம்: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கேள்வி, பதில் நேரத்தின்போது அவர் பேசியதாவது:;
விழுப்புரம் சுற்று வட்டார பகுதியில் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில்கொண்டு, பொய்யப்பாக்கம் பகுதியில், புதிய துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு, அங்கு 110/22 கே.வி.ஏ., துணை மின் நிலையம் அமைய இடமும் தேர்வு செய்து தயார்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, அத்தியவசிய தேவையை கருத்தில் கொண்டு, புதிய துணை மின் நிலையத்தை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய துணை மின் நிலையங்களில், தற்போது 250 துணை மின் நிலையங்களுக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள துணை மின் நிலையங்களுக்கு திட்டம் தயாரித்து, நிர்வாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி வந்த பின், அங்கு துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என்றார்.