ADDED : நவ 21, 2025 05:20 AM

விழுப்புரம்: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அறிவுக்கரசி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவசேனா முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி, அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சமவேலைக்கு சமஊதியம் என்ற ஐகோர்ட் தீர்ப்பின் மீதான மேல்முறையீடு ரத்து செய்தல், தமிழக அரசு மருத்துவ துறையில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பொருளாளர் நர்மதா நன்றி கூறினார்.

