/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் கோவிலில் பாலுாட்டும் தாய்மார்கள் அவதி
/
மேல்மலையனுார் கோவிலில் பாலுாட்டும் தாய்மார்கள் அவதி
மேல்மலையனுார் கோவிலில் பாலுாட்டும் தாய்மார்கள் அவதி
மேல்மலையனுார் கோவிலில் பாலுாட்டும் தாய்மார்கள் அவதி
ADDED : மார் 30, 2025 11:21 PM
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலுாட்ட தனி அறையில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில், தமிழகம் முழுதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாசி பெருவிழாவின் போது தேர் திருவிழா, மயானக் கொள்ளை, தீமிதி விழா, தெப்பல் உற்சவத்திலும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான பாலுாட்டும் தாய்மார்களும் விழாவுக்கு வருகின்றனர்.
கூட்ட நெரிசல் காரணமாக பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பலர் நேர்த்தி கடன் செலுத்துவதிற்காக, இரவு கோவில் வளாகத்தில் தங்கி இருந்து மறு நாள் செல்கின்றனர். மற்ற கோவில்களை போன்று, உடனடியாக சுவாமி தரிசனம் செய்துவிட்டு உடனே செல்பவர்கள் மிகவும் குறைவு.
கோவிலுக்கு வரும் பாலுாட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்ட தனி அறைகள் இல்லை. குழந்தைக்கு பாலுாட்ட மறைவான இடம் தேடி அலைகின்றனர். மறைவான இடம் கிடைக்காததால் பொது இடங்களில் பாலுாட்ட வேண்டிய சங்கடத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே பாலுாட்டும் தாய்மார்களுக்கு என கோவில் வளாகத்தில் உள்ள காத்திருப்பு மண்டபங்களில் தனி அறைகளை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.