/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வனப்பகுதியில் தார் சாலை அமைக்க செஞ்சி அருகே அதிகாரிகள் ஆய்வு
/
வனப்பகுதியில் தார் சாலை அமைக்க செஞ்சி அருகே அதிகாரிகள் ஆய்வு
வனப்பகுதியில் தார் சாலை அமைக்க செஞ்சி அருகே அதிகாரிகள் ஆய்வு
வனப்பகுதியில் தார் சாலை அமைக்க செஞ்சி அருகே அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 27, 2025 07:06 AM

செஞ்சி : பாடிப்பள்ளம்-சென்னாலுார் இடையே வனப்பகுதியில் தார் சாலை அமைக்க ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.
செஞ்சி ஒன்றியம், பாடிபள்ளம்- சென்னாலுார் இடையே, 2 கி.மீ., துாரத்திற்கான சாலை வனப்பகுதியில் உள்ளது. வனத்துறையின் அனுமதி கிடைக்காமல் இதுவரை தார் சாலை அமைக்காமல் இருந்தனர். இதனால் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில், 15 கி.மீ., சுற்று வழியில் சென்று வந்தனர். இந்த வழியில் தார் சாலை அமைக்க 50 ஆண்டுகளாக கிராம மக்கள் போராடி வந்தனர்.
பாடிப்பள்ளம் ஊராட்சி தலைவர் தாட்சாயணி கார்த்திகேயன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி எம்.எல்.ஏ., மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதையடுத்து ஒன்றிய நிர்வாகம் மூலம் வனத்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினர். இதன் அடிப்படையில் கடந்த மாதம் தார் சாலை அமைக்க ஒன்றிய நிர்வாகத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்று ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில், ஒன்றிய பொறியாளர்கள் ஆனந்தி, சுப்ரமணியன், ரஞ்சித், பணி மேற்பார்வையாளர் சீத்தாராமன் ஆகியோர் இந்த சாலையில் ஆய்வு மேற் கொண்டனர்.
எங்கெங்கு சிறு பாலம் அமைக்க வேண்டும் என கணக்கெடுப்பு நடந்தினர். மிக விரை வில் திட்ட மதிப்பீடு செய்து தார் சாலை அமைக்கப்படும் என கிராம மக்களிடம் உறுதியளித்தனர். ஆய்வின் போது ஊராட்சி தலைவர் தாட்சாயணி கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் சஞ்சய்காந்தி ஆகி யோர் உடன் இருந்தார்.