/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர்ம விலங்குளை பிடிக்க கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
/
மர்ம விலங்குளை பிடிக்க கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
மர்ம விலங்குளை பிடிக்க கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
மர்ம விலங்குளை பிடிக்க கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
ADDED : ஆக 27, 2025 07:03 AM

திண்டிவனம் : திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் ஆடுகளை வேட்டையாடி வரும் மர்ம விலங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியது.
விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை, சேவூர், இறையானுார், கொங்கரப்பட்டு, குடிசைப்பாளையம், தாதாபுரம், புத்தனந்தல் ஆகிய கிராமங்களில், ஆட்டு பண்ணையில் நள்ளிரவில் மர்ம விலங்குகள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி வருகின்றன.
இதில், 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாக உள்ளன. இறந்த ஆடுகளை வனத்துறையினர், கால்நடைத்துறையினர் பரிசோதனை செய்ததில், ஓநாய்கள் ஆடுகள் இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில் வனசரக வனவர் இமயராஜ் தலைமையில் கொங்கர பட்டு, தாதாபுரம், வெளிமேடு பேட்டை, ஆசூர், குடிசை பாளையம் ஆகிய கிராமங்களில், மரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று முன்தினம் இரவில் துவங்கியது.
இந்த கேமராக்கள் மூலம் மர்ம விலங்கை கண்டறிந்து, அதற்கேற்ப கூண்டுகளை வைத்து அதை பிடித்து விடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.