
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் கேரளா திருவோண நட்சத்திரமான நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் நகரில் பூந்தோட்டம், நாராயணன் நகர், வி.மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் கேரளா மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர், நேற்று தங்கள் வீட்டில் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதையொட்டி பெண்கள், கேரள பாரம்பரிய சேலை அணிந்து, வீடுகளுக்கு முன்பு வண்ணமயமான அத்தப்பூ கோலம் வரைந்தனர். பின்னர், வீட்டில் திருவிளக்கு வைத்து, இஷ்ட தெய்வத்தை குடும்பத்துடன் வழிபட்டனர். மேலும், அவர்களது பாரம்பரிய உணவு தயார் செய்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.