/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவக்கரையில் புறக்காவல் நிலையம் திறப்பு
/
திருவக்கரையில் புறக்காவல் நிலையம் திறப்பு
ADDED : அக் 08, 2025 12:25 AM

வானுார்; திருவக்கரையில் புதிய புறக்காவல் நிலையத்தை டி.எஸ்.பி., உமாதேவி திறந்து வைத்தார்.
வானுார் அடுத்த திருவக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் மற்றும் சந்திரமவுலீஸ்வரர் கோவில்கள் தனித்தனியாக அமைந்துள்ளன. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம்.
அது மட்டுமின்றி திருவக்கரை பகுதியை சுற்றி ஏராளமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், எந்நேரமும் வாகன போக்குவரத்து இருக்கிறது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, திருவக்கரை பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் படி திருவக்கரை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக புறக்காவல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தை கோட்டக்குப்பம் உட்கோட்ட டி.எஸ்.பி., உமாதேவி கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ச்சியாக அவர், திருவக்கரை ஊராட்சி சார்பில் கிராமங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, 34 புதிய சி.சி.டி.வி., கேமராவை இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வானுார் இன்ஸ்பெக்டர் சத்யா, திருவக்கரை கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.