ADDED : அக் 08, 2025 12:25 AM

விழுப்புரம்; பிடாரிப்பட்டில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வானுார் தொகுதி, கண்டமங்கலம் ஒன்றியம், பிடாரிப்பட்டு ஊராட்சியில், தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பொது மக்களிடம் மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், தாசில்தார் வேல்முருகன், தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர்கள் மதியழகன், புருஷோத்தமன், பொருளாளர் மகேந்தரவர்மன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சுரேஷ், பிரவீன்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜி, தாமரைவதணி குமரன், நிர்வாகிகள் இளவரசன், சின்னதம்பி, விநாயகம், சுரேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.