/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவரப்பாக்கம் பதிவாளர் அலுவலகம் இடம் மாற்ற எதிர்ப்பு: திண்டிவனத்திலேயே அமைக்க கோரிக்கை
/
அவரப்பாக்கம் பதிவாளர் அலுவலகம் இடம் மாற்ற எதிர்ப்பு: திண்டிவனத்திலேயே அமைக்க கோரிக்கை
அவரப்பாக்கம் பதிவாளர் அலுவலகம் இடம் மாற்ற எதிர்ப்பு: திண்டிவனத்திலேயே அமைக்க கோரிக்கை
அவரப்பாக்கம் பதிவாளர் அலுவலகம் இடம் மாற்ற எதிர்ப்பு: திண்டிவனத்திலேயே அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 28, 2025 05:28 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் பல ஆண்டுகளாக இயங்கும் அவரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தை இட மாற்றம் செய்வதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் - செஞ்சி ரோடு சந்தைமேட்டில் தனியார் இடத்தில், மாவட்ட பதிவாளர் அலுவலகம், அவரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம், இணை சார் பதிவாளர் அலுவலகம்-1 ஆகியவை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
நேரு வீதியில் பழைய கோர்ட் வளாகம் அருகே இணை பதிவாளர் அலுவலகம்-1 சமீபத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்டு இயங்குகிறது.
இந்நிலையில், அவரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம் மட்டும், திண்டிவனம் - புதுச்சேரி சாலை, கிராம பகுதியான இடையன்குளத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்க பத்திரப் பதிவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அனைத்து தரப்பு மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்து.
ஏற்கனவே திண்டிவனத்தில், ஒருங்கிணைந்த கோர்ட், கிளைச் சிறைச்சாலை ஜக்காம்பேட்டையிலும், வட்டார போக்குவரத்து அலுவலகம் மொளசூரிலும் இயங்குகிறது.
இதனால் நகர பகுதிக்கு வரும் பொது மக்கள் கோர்ட், வட்டார போக்குவரத்து அலுவலகம் என வெவ்வேறு பகுதிகளில் இருப்பதால் அவதியடைகின்றனர். திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்களுக்கு அவரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம், திண்டிவனம் நகர பகுதியில் இருந்து 3 கி.மீ., துாரமுள்ள இடையன்குளம் பகுதிக்கு மாற்றுவதால், வீண் அலைச்சல் ஏற்படும்.
பணப் புழக்கம் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இடையன்குளத்திற்கு சார் பதிவாளர் அலுவலகத்தை மாற்றக்கூடாது என, கலெக்டர், சப் கலெக்டர், மாவட்ட பதிவாளர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவை பொதுமக்கள் அனுப்பியுள்ளனர்.
நேரு வீதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இணை சார் பதிவாளர் அலுவலகம்-2ல், அரசுக்கு சொந்தமான இடம் அதிகமாக உள்ளது. இங்கு, மாவட்ட பதிவாளர் அலுவலகம், அவரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம், இணை சார் பதிவாளர் அலுவகம் 1-2 ஆகியவற்றை ஒருங்கிணைத்து அமைத்தால் பொதுமக்களின் அலைச்சல் தவிர்க்கப்படும்.
எனவே, நகர பகுதியிலேயே அவரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.