/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிடங்கல் ஏரி உபரி நீரால் தரைப்பாலம் சேதம்
/
கிடங்கல் ஏரி உபரி நீரால் தரைப்பாலம் சேதம்
ADDED : டிச 13, 2024 11:20 PM

திண்டிவனம்: திண்டிவனம், கிடங்கல் ஏரி உபரி நீர் வெளியேறியதால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் அடியோடு அடித்துச் செல்லப்பட்டது.
பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் திண்டிவனம் கிடங்கல் (1) பகுதியில் உள்ள ஏரி உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தரைப்பாலம் அடியோடு அடித்து செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தரைப்பாலம் கடந்த 9ம் தேதி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக திண்டிவனம் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், கிடங்கல் ஏரியின் உபரி நீர் மீண்டும் வெள்ளம் போல் வரத்து வாய்க்கால் வழியாக நேற்று முன்தினம் இரவு கரைபுரண்டோடியது.
இதில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மேம்பாலம் வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

