UPDATED : நவ 04, 2026 12:19 PM
ADDED : நவ 04, 2026 12:19 PM
விழுப்புரம்: திண்டிவனத்தில் பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
திண்டிவனம், பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த மைக்கேல் மகன் சாம்சன்,30; பெயிண்டர். இவர், காஞ்சிபுரம் மாவட்டம், திருநீர்மலை பகுதியை சேர்ந்த அர்ச்சனா,24; என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யுவானி என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
சாம்சனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி குடித்துவிட்டு வந்து அர்ச்சனாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், அர்ச்சனா கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சாம்சன், தான் வசித்து வரும் வாடகை வீட்டில் இருந்த மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
