/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
/
ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
ADDED : நவ 02, 2025 03:48 AM

விக்கிரவாண்டி: காணை ஒன்றியம், திருக்குணம் ஊராட்சி அலுவலகத்திற்கு தலைவர் பூட்டு போட்டதால் பரபரப்பு நிலவியது.
திருக்குணம் ஊராட்சியில் நேற்று நடந்த உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் ரவீந்திரன் வரவேற்று தீர்மானங்களை படித்தார்.
திருக்குணம் ஊராட்சியில் தரைப்பாலம், சாலை வசதி, திருக்குணம், கொசப்பாளையம் சுடுகாட்டிற்கு மினி டேங்க் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏற்கனவே ஊராட்சி தலைவர் பிரகாஷ், அரசு அதிகாரிகள் மீதும், பி.டி.ஓ., க்கள் மீதும் புகார் மனுக்கள் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஊராட்சி செயலாளர், தலைவர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மான புத்தகத்தில் தலைவரிடம் கையெழுத்து பெறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர், ஊராட்சி அலுவலக முகப்பு வாயில் கேட்டிற்கு பூட்டு போட்டு பூட்டினார்.
அதனைத் தொடர்ந்து, ஊராட்சி செயலாளர் ரவீந்திரன் தனது பங்கிற்கு அதே கேட்டில் ஒரு பூட்டை போட்டு பூட்டினார்.
இருவரும் அலுவலகத்திற்கு மாறி மாறி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

