/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை
/
ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை
ADDED : அக் 16, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் போலீசார் நேற்று சோதனை செய்தனர்.
அதன்படி பல்லவன், வைகை, பாமினி, டில்லி, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் குணசேகர், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்ரீன் சுஜாதா தலைமையிலான போலீசார், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் கொண்டு செல்கின்றனரா என சோதனை நடத்தினர். மேலும், பயணிகளிடம், ரயில்களில் வெடி பொருட்களை சட்டப்படி எந்த காரணம் கொண்டும் எடுத்துச் செல்ல கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.