/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.கே.டி., சாலையில் பேட்ச் ஒர்க் தீவிரம்
/
வி.கே.டி., சாலையில் பேட்ச் ஒர்க் தீவிரம்
ADDED : மார் 25, 2025 04:15 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி - கும்ப கோணம் - தஞ்சாவூர் நான்கு வழி சாலையில் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி காரணமாக பேட்ச் ஒர்க் தீவிரமாக நடைபெறுகிறது.
வி.கே.டி., சாலையில் விக்கிரவாண்டி 0 கி.மீ., முதல் 13 கி.மீ., துாரம் கோலியனுார் கூட்ரோடு வரை கடந்த பெஞ்சல் புயலின் போது பாதிக்கப்பட்ட சாலையில் பெரிய பேட்ச் ஒர்க் செய்த நகாய் ஒப்பந்ததாரர்கள் ஆங்காங்கே உள்ள குண்டு குழிகளை சீரமைக்காத தால் பைக், இலகுரக வாகனங்கள் விபத்துக்குள் ளானது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கை எடுத்த நகாய் அதிகாரிகள் நேற்று விக்கிரவாண்டியில் இருந்து கோலியனுார் கூட்ரோடு வரை குறிப்பாக மேல் பாதி பகுதியில் ஏற்பட்டிருந்த பள்ளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.