/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கருப்பு துணி முக்காடு போட்டு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கருப்பு துணி முக்காடு போட்டு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு துணி முக்காடு போட்டு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு துணி முக்காடு போட்டு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2025 01:53 AM

விழுப்புரம் : தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தலையில் கருப்பு துணி முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் கமலா தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் அமுதா வரவேற்றார். நிர்வாகிகள் ரத்தினம், ராஜேந்திரன் பேசினார். நிர்வாகிகள் தயாளன், சந்திரா, ராமலிங்கம் உட்பட பலர் பங்கேகற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,750 ரூபாயை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி 313ஐ நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
செஞ்சி செஞ்சி, வல்லம் மேல்மலையனூர் ஒன்றியங்கள் சார்பில் செஞ்சியில் நடந்த ஒப்பாரி ஆர்ப்பாட்டத்திற்கு, வல்லம் ஒன்றிய தலைவர் பூங்காவனம் தலைமை தாங்கினார். குணபாலன் வரவேற்றார். மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் பூங்காவனம், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். நிர்வாகிகள் சவுந்தரராஜன், ராஜேந்திரன், ஜெயந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
தாசில்தார் துரைசெல்வன் பேச்சுவார்த்தை நடத்தி அரசுக்கு கோரிக்கைகளை அனுப்புவதாக உறுதியளித்து போராட்டத்தை முடித்து வைத்தார்.