/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
/
சாலையில் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
சாலையில் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
சாலையில் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
ADDED : செப் 23, 2024 05:11 AM

விழுப்புரம்,: விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நகருக்குச் செல்லும் பகுதியில், சிலர் இறைச்சி கழிவுகளைக் கொட்டுகின்றனர்.
இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பன்றிகள் குப்பைகளை கிளறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இறைச்சி கழிவுகளை நகரின் வெளிப்பகுதியில் கொட்டவும், குடியிருப்பு அருகே கொட்டுவோரை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.