/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் தீர்த்தகுளத்தில் நடை பயிற்சி பாதை திட்டத்தை கைவிடக் கோரி மனு

ADDED : அக் 28, 2025 06:06 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் தீர்த்தகுளம் புனிதத்தை காக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அளித்த மனு:
விழுப்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்தகுளத்தில் சீரமைப்பு பணி நடைபெற இருப்பதாகவும், குளத்தைச் சுற்றிலும் நடைபயிற்சி செய்ய பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம்.
இந்த தீர்த்தகுளம் புனிதமானது. நடைபயிற்சி செய்வதற்கான இடம் அல்ல. சீரமைப்பு பணியில் நடைபயிற்சி பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.