/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்னியூர் கல்லுாரியில் கருத்தரங்க நிகழ்ச்சி
/
அன்னியூர் கல்லுாரியில் கருத்தரங்க நிகழ்ச்சி
ADDED : அக் 28, 2025 06:06 AM
விழுப்புரம்: அன்னியூர் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லுாரியில், கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி பொறுப்பு முதல்வர் அசோகன் தலைமை தாங்கினார். அரிபுத்திரன் முன்னிலை வகித்தார். அரசியல் அறிவியல் துறை தலைவர் சுவாமிநாதன் வரவேற்றார். விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரி பேராசிரியர் ராமஜெயம், இன்றைய சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களின் தேவை குறித்தும், மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், பிறசட்டங்களின் நடைமுறைகள் பற்றியும் விளக்கினார். ஓய்வுபெற்ற ஆசிரியர் கோவிந்தராசு, அருணாச்சலம், ரேவதி, கிரிஷ்வர், ராசு, விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அலுவலக கண்காணிப்பாளர் ரகுபதி நன்றி கூறினார்.

