/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பெருவிழா
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பெருவிழா
ADDED : அக் 28, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், அரசு மருத்துவமனை அருகே உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் மகா சூரசம்ஹார விழா நடந்தது.
அதனையொட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி, சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை நெடுஞ்சாலையில் பக்தர்கள் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
போக்குவரத்து போலீசார், சென்னை நெடுஞ்சாலையில் இந்த கோவில் உள்ள பகுதிகள் வரை, வாகன போக்குவரத்தை ஒருபுறமாக திருப்பி விட்டனர்.
இன்று 28ம் தேதி காலை 7:30க்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

