/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
/
மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் அப்துல்ஹமீது முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அருள்ஜோதி பேசினார்.
இதில், தொழிலாளர் நல சட்டப்படி மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்; 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும்; பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இணை செயலர் மணவாளன் நன்றி கூறினார்.