/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள்
/
கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள்
ADDED : செப் 17, 2025 12:13 AM

கோட்டக்குப்பம்; தந்திராயன்குப்பம் கடற்கரையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி-சென்னை இ.சி.ஆர்., கோட்டக்குப்பம் அடுத்த முதலியார்சாவடியில் ஆரோவில் மற்றும் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனால் கடற்கரையோரம் ஏராளமான தனியார் கெஸ்ட் ஹவுஸ்கள், ரிசார்ட்டுகள் உள்ளன.
இங்கு வார மற்றும் தொடர் விடுமுறை தினங்களில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும்.
இந்நிலையில், தந்திராயன்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸ்களில் குவியும் குப்பைகளை அதற்குண்டான இடத்தில் கொட்டாமல், கடற்கரையோரம் கொட்டி விடுகின்றனர்.
இதனால் கடற்கரை பகுதி முழுதும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளாக காட்சியளிக்கிறது. கடற்கரைக்கு செல்லும் சாலையோரம் மட்டுமின்றி, மணல் பரப்பிலும், குப்பைகள் குவிந்துள்ளன.
இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.