ADDED : ஜூலை 19, 2025 02:46 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பா.ம.க., ஆண்டு விழாவையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியில் நடந்த விழாவிற்கு, மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கி கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாநில மாணவரணி செயலாளர் பாலஆனந்த் , மாவட்ட தலைவர் ஸ்டாலின், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், வன்னியர் சங்க செயலாளர் தமிழகன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், துரை, பாலா, எழிலரசன், வேல்முருகன், செல்வம், குழந்தைவேல், ராமச்சந்திரன், ஒன்றிய தலைவர்கள் சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர்கள் இளந்திரையன், போஜராஜன், கங்கை அமரன், நகர துணைச் செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பூராசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் காந்தி சிலையருகே மத்திய மாவட்ட பா.ம.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். மாணவர் சங்க செயலாளர் பாலஆனந்த், வன்னியர் சங்க தலைவர் தமிழழகன், அமைப்பு செயலாளர் திரு முன்னிலை வகித்தனர்.
துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் இளந்திரையன், வழக்கறிஞர் சசிக்குமார், நிர்வாகிகள் போஜராஜன், கங்கை அமரன், பூராசாமி, அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.