/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 06, 2024 10:40 PM

திண்டிவனம் ; வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டிவனத்தில் போலீஸ் தடையை மீறி பா.ம.க.,வினர் தாலுகா அலுவலகம் முன் நேற்று காலை குவிந்தனர். அவர்களதிடம் ஏ.டி.எஸ்.,பி., தினகர், டி.எஸ்.பி., பிரகாஷ் ஆகியோர், பா.ம.க., நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டின் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் பால்பாண்டியன்ரமேஷ், சேகர், நகர செயலாளர் மணிகண்டன், வன்னியர் சங்க நிர்வாகிகள் சம்பத், ரவி, நிர்வாகிகள் ஜெயராமன், பொன்மொழி, மகளிர் அணி கவிதா, தனம், தேவி, குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உளுந்துார்பேட்டை
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க., தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜ்குமார், துணைச் செயலாளர் சத்யா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் நேரு, ஜெகன், மணிராஜ், சுரேஷ், மாநில இளைஞரணி முன்னாள் துணை தலைவர் தவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செஞ்சி
செஞ்சி, மயிலம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி வன்னிர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். பா.ம.க., நகர செயலாளர் சின்னத்தம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள், முன்னாள் ஒன்றிய சேர்மன் அன்பழகன், நிர்வாகிகள் ஜெயக்குமார், அய்யனார், ரகு, சரவணன், கணபதி, பூங்காவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வன்னியர் சங்க தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். ஒன்றிய, நகர செயலாளர்கள் ராஜா, ஐயப்பன், பாலு, தமிழ்மணி, அருள்ஹாசன், ராஜ, ராமச்சந்திரன், முருகன், நாராயணன், அஜித், வேல்முருகன், மணிகண்டன், மணிமாறன் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மணி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் பங்கேற்று பேசினார்