/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பச்சிளம் குழந்தை மீட்பு போலீசார் விசாரணை
/
பச்சிளம் குழந்தை மீட்பு போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 14, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே கோவில் வாயிலில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
வளவனுார் அடுத்த வி.புதுார் குட்டிஆண்டவர் கோவில் வாயில் பகுதியில், நேற்று முன்தினம் 4 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை, வெள்ள வேட்டியில் சுற்றிய நிலையில் கிடந்தது.
குழந்தையை யார் விட்டுச் சென்றார்கள் என்ற விபரம் தெரியவில்லை.
தகவலறிந்து வுந்த வளவனுார் போலீசார் குழந்தையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதி வி.ஏ.ஓ., பத்மஸ்ரீ அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.