/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் வாலிபர் உடல்; போலீஸ் விசாரணை
/
கிணற்றில் வாலிபர் உடல்; போலீஸ் விசாரணை
ADDED : செப் 24, 2024 12:07 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த டி.பாஞ்சாலம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சக்தி, 26; பினாயில் விற்பனையாளர். இவரது மனைவி மகேஸ்வரி, 20; கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
சமீபத்தில் சக்தி விபத்தில் சிக்கியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, தொழில் செய்ய முடியாமல் மனஉளைச்சலில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2:00 மணி முதல் சக்தியை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்த நிலையில், சலவாதி அருகே உள்ள ஒரு விவசாய தரைக் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து சக்தி இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.