/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டக்டர் மீது தாக்குதல்; மூவருக்கு போலீஸ் வலை
/
கண்டக்டர் மீது தாக்குதல்; மூவருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூன் 11, 2025 07:08 AM
விழுப்புரம்; வளவனுார் அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, பூமியான்பேட்டையை சேர்ந்தவர் ஜெகதீஸ், 39; இவர், புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கம் செல்லும், புதுச்சேரி மாநில அரசின் பி.ஆர்.டி.சி., பஸ் கண்டக்டர்.
நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பி.ஆர்.டி.சி., பஸ்சில், இந்திரா சிக்னலில் ஏறிய நபர் டிக்கெட் எடுக்காமல் பயணித்தார்.
பஸ் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகே சென்றபோது, கண்டக்டர் ஜெகதீஸ், அந்த நபரை பஸ்சில் இருந்து இறக்கி விட்டார்.
அப்போது, அங்கு வந்து பஸ்சை வழிமறித்த அடையாளம் தெரியாத 3 பேர், என் அப்பாவை இறக்கிவிட்டியா என கேட்டு, கண்டக்டர் ஜெகதீசை அடித்து தாக்கினர்.
இது தொடர்பாக ஜெகதீஸ் அளித்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை தேடி வருகின்றனர்.