/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு கேட்டு காவல் நிலையம் முற்றுகை திண்டிவனத்தில் பரபரப்பு

ADDED : நவ 16, 2024 04:58 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி இறந்த வாலிபர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவிலின் கும்பாபிேஷகம் நாளை 17ம் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் வளாகத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
திண்டிவனம், பெலாக்குப்பம், பனமரத்து பகுதியைச் சேர்ந்த பழனி மகன் வீரமணி, 28; நேற்று முன்தினம் வெல்டிங் பணியில் ஈடுபட்டார். பணி முடிந்த கோபுரத்தில் இருந்து கீழே இறங்கியபோது, சீரியல் லைட் ஒயரில் கால் வைத்த போது மின்சாரம் தாக்கி இறந்தார்.
இதற்கிடையில் வீரமணியின் உறவினர்கள் மற்றும் வெல்டிங் அசோசியேஷனைச் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கு மேற்பட்டோர், இறந்த வீரமணி குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரி நேற்று காலை 11:00 மணியளவில் திண்டிவனம் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வீரமணி குடும்பத்திற்கு நஷ்ட ஈடு தருவதற்கு உடன்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவரும் 11:30 மணிக்கு கலைந்து சென்றனர்.