/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காவலர் குடியிருப்பில் சேதமடைந்த சாலையால் அவதி
/
காவலர் குடியிருப்பில் சேதமடைந்த சாலையால் அவதி
ADDED : ஆக 06, 2025 01:07 AM

விழுப்புரம்; சாலாமேடு காவலர் குடியிருப்பு பகுதி சாலை சிதைந்தும், முட்புதர் மண்டி பராமரிப்பின்றி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழுப்புரம், சாலாமேடு 40வது வார்டு இ.பி.,காலனி பகுதியில், காவலர் குடியிருப்புகள் உள்ளன. இந்த பழைய காவலர் குடியிருப்பில் 20 குடும்பத்தினரும் வசிக்கின்றனர்.
மேலும், அதனை சுற்றி இ.பி.,காலனி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் எடுத்து, பணிகள் முடிந்து நீண்ட காலமாகிறது. ஆனால் அங்கிருந்த சாலைகள் சேதமடைந்து, சாலை இருக்கும் இடமே தெரியாமல் மண் சாலைகளாக தொடர்கிறது.
காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலை விவசாய நிலம் போல் மண் மேடாக காட்சியளிக்கிறது.
அந்த குடியிருப்புகளை சுற்றிலும் நீண்டகாலமாக பராமரிப்பின்றி முட் செடிகளும், மரங்களும் முளைந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், குடியிருப்புகளும் சேதமடைந்து வருகிறது. சாலை, சுற்றுசுவர் பாதுகாப்பின்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழை காலங்களில் சேரும், சகதியுமாக 2 கி.மீ., தொலைவிற்கு பிரதான சாலைக்கு அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். இதனால், சிதைந்து போன சாலையை புதுப்பித்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.