/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவியிடம் சீண்டல் போலீஸ்காரருக்கு 'போக்சோ'
/
மாணவியிடம் சீண்டல் போலீஸ்காரருக்கு 'போக்சோ'
ADDED : நவ 09, 2025 03:13 AM
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி 10ம் வகுப்பு படிக்கிறார். இவர், கிளியனுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 5ம் தேதி காதலனுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். பெற்றோர் புகாரில் ஆரோவில் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், 6ம் தேதி அதிகாலை, 4:30 மணியளவில், திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மாணவி தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் தென்ஆலப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோ, 40, மாணவியை நிறுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் இளங்கோ அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஆரோவில் போலீசார், நேற்று முன்தினம், மாணவியை சென்னையில் மீட்டனர்.
விசாரணையில், இளங்கோ தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி கூறினார்.
திண்டிவனம் போலீசார், இளங்கோவை போக்சோவில் கைது செய்தனர்.

