/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 28, 2025 11:06 PM

செஞ்சி: செஞ்சி, அனந்தபுரம் நகர தி.மு.க., ஓட்டுச் சாவடி முகவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏராளமான புதிய திட்டங்கள் மூலம் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இந்த சாதனைகளை நிர்வாகிகள் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியின் போது ஓட்டுச்சாவடி முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கவனமுடன் இருந்து பெயர் நீக்குதல் சேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், நகர செயலாளர்கள் கார்த்திக், சம்பத், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.