/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்னியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல்
/
பொன்னியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல்
ADDED : மே 07, 2025 01:59 AM

மயிலம் : மயிலம் அடுத்த கொரளூர் பொன்னியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கொரளூர் பொன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த மாதம் 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி அம்மன் சிறப்பு அலங்காரங்களில் வீதி உலா நடந்து வருகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மாலை 5:00 மணிக்கு கிராம பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். இரவு 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும், இரவு 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் வீதியுலா நடந்தது.
இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.