/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிழக்கு பாண்டி சாலையில் பள்ளம் : வாகன ஓட்டிகள் அவதி
/
கிழக்கு பாண்டி சாலையில் பள்ளம் : வாகன ஓட்டிகள் அவதி
கிழக்கு பாண்டி சாலையில் பள்ளம் : வாகன ஓட்டிகள் அவதி
கிழக்கு பாண்டி சாலையில் பள்ளம் : வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 23, 2025 11:30 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சேதமடைந்த நெடுஞ்சாலை பகுதியை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மகாராஜபுரத்தில், கிழக்கு பாண்டி சாலையில், புதுச்சேரி-விழுப்புரம் மார்க்க நெடுஞ் சாலை பகுதியில், பாதாள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன் பெரும் பள்ளம் உருவானது.
நகராட்சி சார்பில் உடனடியாக குழாய் உடைப்பு சீர்செய்யப்பட்டு, மண் கொட்டி மூடினர்.
இதனையடுத்து, சாலையில் பள்ளம் ஏற்பட்டதால், கிராவல் கொட்டி சீர்படுத்தினர்.
இந்நிலையில், அந்த பகுதியில் மீண்டும் மண் பகுதி உட்கார்ந்ததால், பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, சாலையும் புதுப்பிக்கப்படாமல் ஜல்லிகள் பெயர்ந்து, புழுதி காற்று வீசி வருகிறது.
இதனால், புதுச்சேரி-விழுப்புரம் மார்க்க வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். முக்கிய நெடுஞ்சாலை சந்திப்பான அந்த பகுதியில், உள்வாங்கிய சாலையை சீர்படுத்தி, தார்ச்சாலை போட கோரிக்கை தொடர்ந்துள்ளது.