/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொடர் மழையால் குண்டும் குழியுமான சாலைகள்
/
தொடர் மழையால் குண்டும் குழியுமான சாலைகள்
ADDED : அக் 16, 2024 10:02 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் இரு தினங்களாக பெய்த தொடர் மழையால், பல குடியிருப்பு சாலைகள் சேதமடைந்தும், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் சகதியுமானது.
விழுப்புரத்தில் கடந்த இரு தினங்களாக பருவமழை துவங்கி கன மழையாக பெய்தது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் கே.கே.ரோடு சாலை ஏற்கனவே இருந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி பெரும் பள்ளமாகிப்போனது. விழுப்புரம் திருச்சி சாலையிலிருந்து தனியார் கல்லுாரி வழியாக பல்வேறு குடியிருப்புகளுக்குச் செல்லும் சிங்கப்பூர் நகர் பிரதான சாலையும், பல இடங்களில் மேடு, பள்ளமும், குண்டும் குழியுமாகி, சகியுமாகியது. இதே போல், விழுப்புரம் திருச்சி சாலையிலிருந்து, கே.கே.ரோடுக்கு செல்லும் பிரதான மெயின்ரோடான என்.ஜி.ஜி.ஓ., நகர் சாலையும், நீண்டகாலமாக புதுப்பிக்காமல் கிடப்பதால், பல இடங்களில் குண்டும், குழியுமாகி, தற்போதைய மழையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
அதனை சுற்றியுள்ள ஆசாகுளம், ஹவுசிங்போர்டு, சிஸ் நகர், மணி நகர், இ.பி.,காலனி, கலைஞர் நகர் சுற்றுப் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு பள்ளம் எடுத்து, பணிகள் முடிந்த நிலையில், பல இடங்களில் சாலை போடாமல், சேரும் சகதியுமாக தொடர்வதால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு செல்கின்றனர். இதே போல், நகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாகியுள்ளதை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

