/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்துறை எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மண்டல செயற்குழு கூட்டம்
/
மின்துறை எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மண்டல செயற்குழு கூட்டம்
மின்துறை எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மண்டல செயற்குழு கூட்டம்
மின்துறை எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மண்டல செயற்குழு கூட்டம்
ADDED : அக் 21, 2024 04:30 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் மின்துறை எம்ப்ளாயீஸ் பெடரேஷன் தொழிற்சங்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மண்டல செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சீனுவாசலு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், வெங்கடேசன், ஆனந்தராமன், நாகராஜன், ரவிச்சந்திரன், வேல்முருகன், சேகர், ஜெயசங்கர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர்கள் விழுப்புரம் திருமலை, கடலுார் மணிமாறன், கள்ளக்குறிச்சி பாண்டியன் அறிக்கை வாசித்தனர்.
நிர்வாக பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மாநில செயலாளர் பஞ்சமூர்த்தி, இணைச் செயலாளர்கள் ஜெயசங்கர், வெள்ளையன் வாழ்த்திப் பேசினர்.
பொதுச்செயலர் சேக்கிழார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மின்துறை களப்பணியில் காலியாக உள்ள பீல்டு அசிஸ்டண்ட், டெக்னிக்கல் அசிஸ்டண்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், டைபிஸ்ட், அசசர் உள்ளிட்ட பணியிடங்களில் நேரடி நியமனங்கள் மூலம் பணியமர்த்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்.
கேங்மேன் பணியாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 5,000 பேருக்கு பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

