/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
மேல்மலையனுார் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
மேல்மலையனுார் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
மேல்மலையனுார் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : செப் 13, 2025 03:40 AM

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அரசு மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' கல்வி இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் திருமால் வரவேற்றார். ஜனாதிபதியின் பாராட்டை பெற்ற பரையந்தாங்கல் கிராம ஊராட்சி தலைவர் ஏழுமலை, மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ்களை வழங்கி, கிராம பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரம் உயர வேண்டும் எனவும், தொலைநோக்கு சிந்தனை, சேவை மனப்பான்மையுடன் செயல்படும் 'தினமலர்' நாளிதழின் கல்வி சேவைகளை பாராட்டியும் பேசினார்.
ஊராட்சி வார்டு உறுப்பினர் அருள்தாஸ், துணை தலைமை ஆசிரியர்கள் முருகன், சங்கர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.