/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
/
சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 17, 2025 12:16 AM

விக்கிரவாண்டி; சாலையை அகலப்படுத்தி, கழிவு நீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி பேரூராட்சி 4வது வார்டு வ.உ.சி., நகரில் வார்டு சபா கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் ேஷக் லத்தீப், துணை சேர்மன் பாலாஜி, வார்டு கவுன்சிலர் சர்க்கார் பாபு முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், பைபாஸ் சாலையிலிருந்து ஹாஸ்டலையொட்டி வரும் சாலையை அகலப்படுத்துதல்,
தெருக்களில் கழிவு நீர் வாய்க்கால் வசதியுடன் சாலையை மேம்பாடு, தெரு விளக்குவசதி, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.
இதில், வரி தண்டலர்கள் தண்டபாணி, துரை, துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம், பதிவறை எழுத்தர் சேகர், தொழில் நுட்ப உதவியாளர் கலையரசி, கணினி ஆப்பரேட்டர் கீதா,உதவியாளர் பிரபா, தீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.