/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்; 441 கோரிக்கை மனுக்கள் குவிந்தன
/
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்; 441 கோரிக்கை மனுக்கள் குவிந்தன
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்; 441 கோரிக்கை மனுக்கள் குவிந்தன
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்; 441 கோரிக்கை மனுக்கள் குவிந்தன
ADDED : நவ 18, 2024 09:54 PM

விழுப்புரம் ; விழுப்புரத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து 441 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
கூட்டத்தில், உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் கடனுதவி கோருதல், பிரதமர் வீடு கட்டும் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 441 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சப் கலெக்டர் முகுந்தன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.