/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் குழாய் மீது கழிவுநீர் பைப் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

ADDED : மார் 05, 2024 05:43 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடிநீர் பைப் மீது கழிவுநீர் பைப் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மழையம்பட்டு காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூமிக்கடியில் குடிநீர் பைப் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த குடிநீர் பைப் மேல் பகுதியில் பேரூராட்சி சார்பில் கழிவுநீர் பைப் அமைக்க ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நேற்று காலை பள்ளம் தோண்டப்பட்டது.
கழிவுநீர் பைப் அமைத்தால் நாளடைவில் பைப் உடைந்து அதற்கு கீழே உள்ள குடிநீர் பைப்பில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அந்த இடத்தில் கழிவுநீர் பைப் அமைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், 50க்கும் மேற்பட்டோர் காலை 10:20 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் - அரசூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 10:50 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.