
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: லட்சுமி நாராயண பெருமாள் கோவில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வளவனுார், வேதவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு மூலவர், உற்சவர் மற்றும் வெங்கடாஜலபதிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, வேதவள்ளி தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, தீபாராதனை நடந்தது.
உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் அர்த்தமண்டபத்தில் எழுந்தருளினார். வெங்கடாஜலபதி பெருமாள், திருமலை சீனிவாச பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.