/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதிற்சுவர் கட்டும் பணியில் ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
/
மதிற்சுவர் கட்டும் பணியில் ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
மதிற்சுவர் கட்டும் பணியில் ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
மதிற்சுவர் கட்டும் பணியில் ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
ADDED : நவ 07, 2025 12:53 AM
விழுப்புரம்: விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான பாதையில் ரயில்வே நிர்வாகம் மதிற்சுவர் கட்ட முயன்றதை அப்பகுதி மக்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில், ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 44 வீடுகள் சில தினங்களுக்கு முன் சென்னை, ஐகோர்ட் உத்தரவின் பேரில் ரயில்வே நிர்வாகிம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
அங்கு, வசித்தோருக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இங்குள்ள பெரும்பாலான பகுதியை மறித்து மதிற்சுவர் கட்டுவதற்காக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, இதற்கான பணிகளை நேற்று துவங்கினர்.
பவர் ஹவுஸ் சாலையில் ரயில்வே துறையினர் அளவீடு செய்வதற்காக பள்ளம் தோண்டினர். இதையறிந்த அப்பகுதி மக்கள் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் திரண்டு பணியை உடனே நிறுத்த வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியதால் போலீசார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தரப்பில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான சாலையாக பவர்ஹவுஸ் சாலை உள்ளது. இங்கு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.
இங்கு சுவற்றை எழுப்பினால் மின்வாரிய அலுவலகம், குடியிருப்புகளுக்கு செல்ல முடியாது. இந்த சாலையை தவிர வேறு மாற்று வழியும் இல்லை. அதனால், இங்கு மதில் சுவர் எழுப்பக் கூடாது என்றனர்.
நகர மன்ற தலைவர், இது பற்றி நகராட்சி நிர்வாகம் மூலம் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதியை நகராட்சி நிர்வாகம், சாலைக்காக பயன்படுத்துகின்றனர். இந்த பகுதிக்கான இடம் வாடகையை நாங்கள் கேட்டு வருகிறோம். வாடகை வழங்கினால் சாலைக்கான இடத்தை வழங்க ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது' என்றனர்.
இந்த பிரச்னையில், கலெக்டர் தலையிட்டு குடியிருப்புகளுக்கு செல்ல எந்த இடையூறும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

