/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் நிறுத்தத்தில் தேங்கும் மழைநீர்
/
பஸ் நிறுத்தத்தில் தேங்கும் மழைநீர்
ADDED : அக் 29, 2025 07:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் மேம்பாலம் கீழ் பஸ் நிறுத்தம் பகுதியில் மழைநீர் குளமாக தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
நகர பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் நிற்கும் பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

