ADDED : ஏப் 30, 2025 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் வி.மருதுார் காளியம்மன் கோவில் அருகில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைபொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்தது. தனி தாசில்தார் ஆனந்தன் மற்றும் ஆர்.ஐ., க்கள் கண்ணன், லட்சுமிநாராயணன், நவீன்குமார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, 25 மூட்டைகளில், 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக குடோனிற்கு அனுப்பி வைத்தனர்.

