UPDATED : அக் 16, 2026 01:17 AM
ADDED : அக் 16, 2026 01:15 AM
அ நிறம் | அளவு
கோட்டக்குப்பம்: விழுப்புரம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று வானுார் அடுத்த மென்னையம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த கடையில் 12 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
கடையின் உரிமையாளர் ஜோசப் விஜி, 48; என்பவ ரிடம் நடத்திய விசாரணை யில், அதே பகுதியில் உள் ள ரேஷன் கடை களில் அரிசியை வாங்கி அதனை இட்லி மாவு தயாரித்து பொதுமக்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
