/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை
/
அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை
அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை
அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை
ADDED : மே 24, 2025 12:18 AM
விழுப்புரம்: அரசு அலுவலக பெயர் பலகைகளில், தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் விழுப்புரம் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
அரசு அலுவலகங்களில், தமிழிலும், ஆங்கிலத்திலும் முறையே 5:3 என்ற விகிதத்தில் அமையலாம் என தமிழ் வளர்ச்சித் துறை அரசாணையில், தமிழுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்கிறது.
தலைமை செயலகத்தில், அயல்நாட்டினரும் வந்து செல்லும் முதல்வரின் அறையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பெயர் பலகை அமைந்துள்ளது. ஆனால், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஆங்கிலத்தில் பெயர் பலகை உள்ளது.
விழுப்புரத்தில் பல அரசு அலுவலகங்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் அரசின் கொள்கையை, அரசு அலுவலகங்களில் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.