/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழையால் சேதமான கல்வெர்ட் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
மழையால் சேதமான கல்வெர்ட் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 13, 2024 07:26 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மழையால் துண்டிக்கப்பட்டு சேதமடைந்த கல்வெர்ட் மற்றும் சாலையை விரைந்த சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த தென்பேரிலிருந்து நந்திவாடி, கீழ்நந்திவாடி சாலை செல்கிறது. கடந்த 10 தினங்களுக்கு முன் ஏற்பட்ட பெஞ்சால் புயல் மழை வெள்ளத்தில் தென்பேர் காளியம்மன் கோவில் அருகே இருந்த கல்வெர்ட் மற்றும் அதனையொட்டி சாலையும் உடைந்து சேதமானது.
இதனால் இச்சாலை வழியாக செல்லும் அரசு டவுன்பஸ் தடம் எண்.31 நிறுத்தி வைக்கப்பட்ட்டுள்ளது.
மேலும், அந்த சாலை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த பாலம் மற்றும் சாலையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

