ADDED : அக் 03, 2025 11:27 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் காந்தி, லால்பகதுார் சாஸ்திரி பிறந்த தின விழா, காமராஜர் நினைவு தினம் மற்றும் சங்க மாநில பேரவையில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் நகராட்சி பூங்காவில் நடந்த விழாவிற்கு, மாவட்ட தலைவர் சிவனேசன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் கணேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் நடராஜன், அருணகிரி, துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் குணசேகரன் முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
காமராஜரின் படத்திற்கு இணை செயலாளர் துரைக்கண்ணு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, மாநில பேரவையில் பங்கேற்ற நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
மூன்று தலைவர்களின் பெருமைகளை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமமூர்த்தி விவரித்தார். மாநில இணை செயலாளர் ரகுபதி சிறப்புரையாற்றினார். பொருளாளர் பர்ணபாஸ் நன்றி கூறினார். சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.