/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
/
திண்டிவனத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : அக் 03, 2025 11:27 PM
திண்டிவனம், : திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்க திட்டத்தின் கீழ், வல்லம் வட்டார விவசாயிகளுக்கு நடந்த பயிற்சி முகாமிற்கு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார்.
திண்டிவனம் உழவர் பயிற்சி வேளாண்மை துணை இயக்குனர் குமாரி ஆனந்தி முன்னிலை வகித்தார். வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்றார்.
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன், பேராசிரியர்கள் ஜமுனா, விஜய கீதா ஆகியோர் இயற்கை வேளாண்மை குறித்தும், இயற்கை இடு பொருட்களை தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் குறித்தும் பேசினர்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை சுய உதவிக்குழு நிர்வாகிகள் சரண்யா, கீதா செய்திருந்தனர். பயிற்சியில் வல்லம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேளாண்மை உதவி அலுவலர் மஞ்சு நன்றி கூறினார்.